அரசுப் பள்ளிகளில் பயின்று "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் பழங்குடியினர், கள்ளர் சீர்மரபினர், வனத்துறை பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படும் என சட்டப்பேரவை விதி 110-ல் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், சுகாதாரம், பள்ளிக் கல்வி, சட்டத்துறை, செயலாளர்கள் மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் சேரும் வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments